Thursday, June 11, 2015

வழி வலியாக மாறுகிறது.!!!


இன்று தான் கவனித்தேன்.

அவர் பெயர்

பொன். தன பாலன்.  அவரை நாம் அறிவது திண்டுக்கல் தனபாலன் என்றே.

பொன் போன்ற நல் உள்ளம் கொண்டவர் இதயம் தான் 
மண்ணில் உதித்தவர் எல்லோரும் போற்றிடும் 
விண்ணவருக்கும் பொருந்தும் 
வையகத்தாரை வழி நடத்தும் 
வள்ளுவத்தை 

தினந்தோறும் போற்றி மகிழும்.

நன்றி எனும் தலைப்பிலே அவர் இட்ட இடுகை என் இதயத்தை 
வென்று விட்டது என்று சொல்வினும் மிகையாகாது.

பத்து பாக்களுக்கும் பத்து விளக்கங்கள் . 
உத்துப் பார்ப்பவர்க்கு வழி காட்டும் விளக்குகள் .

படிக்கையிலே ஒரு வரி மட்டும் என்னை திருப்பித்திருப்பி மேலும் மேலும் படி,படி, படி என்று
அறிவுறுத்தியது.
+Dindigul Dhanabalan
வழி சில வேளையில் வலியாக மாறுகிறது.

வழி, வலி இந்த இரண்டு சொற்களையுமே பார்த்தேன்.

ஒன்றிலே இன்னொன்றும் இருக்கிறது.  வலி இல்லாமல் எந்த வழியும் இல்லை.

அந்த இடுகையிலே நான் இட்ட பின்னோட்டம் இதோ: 


உண்மைதான். இருப்பினும் வலி தராத வழி ஏதேனும் உண்டோ/

உடலை வருத்தி உழைத்து அதன் வழி கிடைக்கும் ஊதியத்தின் 
பலன்  மன அமைதி, உவகை,ஆனந்தம் எல்லாம் 
வலி தராத்  தொழிலில்  உண்டோ ?


மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

செல்லும் வழி நெடுகில் இடர்ப்பாடு கள்  வரத்தான் செய்யும். 

அந்த இடர்கள் தர இருக்கும் வலிகளை முன் நோக்கி அதற்கான  தீர்வுகளையும் தீர ஆலோசித்த பின் 

வள்ளுவன் வாய்மொழி யாம் 
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:429

என்ற குரளை நினைவில் இருத்தி, 
எந்த ஒரு செயலிலும் இறங்குவது நல்லது.


தாமரை வேண்டுபவன் சேற்றில் இறங்க வேண்டுமே என எண்ணிடலாமோ  ? முத்து எடுக்க நினைப்பவன் மூச்சு அடைக்க முடியுமா என ஐயப்பாடு கொள்வின் என்று தான் முத்து எடுப்பான் ?

 வலி வருமே என்ற அச்சப்படுபவள் 
 பிள்ளை பெற ஆசைப்படுவதும் சரியோ ?

எந்த ஒரு செயலிலும் 
ஆக்கமும் உண்டு.
அதிர்வும் உண்டு. 
ஆனந்தமும் உண்டு. 
ஆங்காங்கே 
ஆலகால விடமும் உண்டு. 

அதிகம் பேசிவிட்டேன்.

சுப்புத் தாத்தா.
பின்.குறிப்பு:
உங்கள் விளக்க உரை எளியவருக்கும் புரியும் வகையில் உள்ளது மெச்சத்தக்கது.  தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்க வளமுடன்.

****************************************************************
###############################################

அடுத்து,
இன்று என்னைக் கவர்ந்த இன்னொரு பதிவு.
+R.Umayal Gayathri
திருமதி உமையாள் காயத்ரி அவர்கள் இயற்றிய கிருஷ்ண கானம் 

க்ருஷ்ணப்பாவை என்னும் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

அது கிருஷ்ணனை நாம் அடையச்செல்லும் பாதை.

Courtesy:
http://www.bcagalleries.com/

இன்னும் சற்று நேரத்தில் அதையும் பாடி மகிழ்வேன்.







பாடலை இங்கேயும் கேட்கலாம்.


2 comments:

  1. தாத்தா...இப்போ நீங்கள் சொன்ன பின் தான் பொன். தனபாலன் என்பது தெரிகிறது. சகோவின் மனம் பொன் போலது தான். அருமையான பதிவுகளை இட்டுக் கொண்டிருக்கிறார். நலமுடன் வாழட்டும் என்றென்றும்...

    கிருஷ்ண பாவைக்கு தாங்கள் போட்டு இருந்த கருத்துக்கு கீழா....பதில் இட்டு இருக்கிறேன் தாத்தா..இவ்வாறு...
    தாத்தா...தாங்கள் விரும்பும் படி சேர்த்து பாடுங்கள்....தாங்கள் அறியாததா...மிக்க நன்றி தாத்தா

    ReplyDelete
  2. ஆகா...! இவ்வளவு நாட்கள் இந்த தளத்தை வாசிக்க தவறி விட்டேன்... இனி தொடர்கிறேன்... நன்றி நன்றி தாத்தா...

    ReplyDelete