Saturday, September 24, 2016

இன்று புரட்டாசி சனிக்கிழமை.

இன்று புரட்டாசி சனிக்கிழமை. 
புலவர் இராமானுஜம் அவர்கள் பாடலை நான் பாடி மகிழ்கிறேன்.
புலவருக்கு எனது மனமார்ந்த நன்றி. 

அவரது வலைக்குச் சென்று இந்த பாடலின் வரிகளைக் கண்டு மகிழவும். 

Monday, September 5, 2016

கண நாதனைப்பணி மனமே

வினாயகர் சதுர்த்திக்கு  இன்று எழுதிய பாடல்  சுப்புத்தாத்தாவின்  இசையமைப்பில்  கேட்கவேண்டுமே!

என்று கேட்டு இருப்பவர் திருமதி ஷைலஜா அவர்கள். கம்ப ராமாயணத்தின் பாடல்களை இவர் எழுதிய பதிவுகளை எல்லாம் பல முறை நான் படித்து வியந்து இருக்கிறேன். 

இன்று விநாயகனை வேண்டுங்கள் அவன் புகழ் பாடுங்கள் என்று அந்தத் தொந்திக் கணபதியை போற்றுபவர் போதும் போதும் என்று நினையும் வரை அருள் புரிவார் என்று சொல்லி இருக்கிறார். 

நான் பாடகன் இல்லை. எனக்குத் தெரிந்த இசையில் மெட்டு அமைத்து இருக்கிறேன். இரு ராகங்களில். 

பல்லவி..

கண நாதனைப்பணி மனமே- அனு
தினமும் ஒருக்கணமேனும். (கணநாதனை)

அனுபல்லவி
மனம் தூய்மையாகும் மகிழ்ச்சி மிகப்பெருகும்
வனவேழ முகந்தன்னை வணங்கிட வினை அகலும்(கண நாதனை)

சரணம்

ஆற்றங்கரை இருப்பான் அழகுச்சோலையிலுமிருப்பான்
போற்றித்துதிப்போர்க்கு ‘போதும்’எனும்வரை அளிப்பான்
ஔவைக்கு அருள் செய்த ஆனை முகத்தானை
எவ்வண்ணம்  தொழுதாலும் ஏற்றுக்கொள்ளுவான்(கண நாதனை)

_______________________________________________________

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள். அவன் 
பொக்கிஷத்தை , அருள் பொக்கிஷத்தை , என்றுமே மூடியது இல்லை.